குஜராத் தலைமைசெயலகத்தின் இடநெருக்கடியை தவிர்க்கும்பொருட்டு புதிதாக கட்டப்பட்ட நான்கு மாடி கட்டடத்தில் இருக்கும் , அலுவலகத்திற்கு, முதல்வர் நரேந்திரமோடி நேற்று இடம் மாறினார்.

குஜராத் தலைமைசெயலகத்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அலுவலகபணிக்காக, நவீன வசதிகளுடன் கூடிய புதியகட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. 150கோடி ரூ செலவிலான இந்த கட்டடத்திற்கு, கடந்த வருடம் , சட்டசபை தேர்தலுக்கு முன்பு , மோடி அடிக்கல்நாட்டினார்.

நான்காவது முறையாக ஆட்சிக்குவந்ததும், புது அலுவலகத்துக்கு இடம்பெயரும் நோக்கில் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தினார். நான்கு மாடிகளைகொண்ட கட்டடம், இருபிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது.

இதில், முதல்வர் மோடிக்கான அலுவலகம், 3வது மாடியில் இருக்கிறது . தரைதளத்தில், வீடியோ கான்பரன்சிங் வசதியுடன் கூட்டஅரங்கம் உள்ளது. இதில், நேற்று தன் அமைச்சரவையின் முதல்கூட்டத்தை மோடி நடத்தினார். தன் அறையிலிருந்து, மோடி பணிகளை தொடங்கினார்.

முதல்வர் அறையுள்ள பிரிவின், 2வது மாடியில், அமைச்சர்களுக்கான அறைகள் உள்ளன. மற்றொருபிரிவில், 2வது மாடியில் துறைசெயலர்களுக்கான அறைகள் உள்ளன. இந்த புதியவளாகத்தில், ஆயிரம் ஊழியர்கள் பணியாற்ற வசதி செய்ய பட்டுள்ளது.

Leave a Reply