பாராளுமன்ற தேர்தலை பாஜக. தனது சொந்தசக்தியில் சந்திக்கும் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை பாஜக. தனது சொந்தசக்தியில் சந்திக்க இருக்கிறது . இலங்கை தமிழர் பிரச்சினையில் மிகமோசமாக நடந்துகொண்ட காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஜனநாயகமுறைப்படி தண்டிக்க பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; மத்திய அரசின் நிர்வாகசீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரை குறித்த ஆலோசனைகூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள் சரியானதே . மாநிலங்களில் சட்ட ஒழுங்கு நிலை நிறுத்தப் படும் என்ற போர்வையில் மத்தியஅரசு மாநிலங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டமாக இது உள்ளது.

மரணதண்டனை நிறைவேற்றினால் சட்ட-ஒழுங்கு பிரச்சினை வந்து விடும் என பஞ்சாப் முதல்வரும், காஷ்மீர்முதல்வரும் கூறி இருப்பது நீதிக்கு உகந்ததல்ல. தற்போது இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கடுமையான சட்டம்இயற்றி தண்டனைகள் கடுமையாக்கப் பட வேண்டும்.

இல்லை எனில் பாகிஸ்தானிலிருந்து பல்லாயிரக்கணக்கான தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிவிடுவார்கள். தமிழகத்தில் கூட்டுறவுதேர்தல் அதிமுக.வின் கட்சிதேர்தல் போல நடக்கிறது. கூட்டுறவு சங்க வேட்புமனு தாக்கலின் போது திருச்சியில் பாஜக.வினர் தாக்கப்பட்டு உள்ளனர்.

தாக்கியவர்களின் மீது தமிழக அரசு உரியநடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டும். வரும் பாராளுமன்றதேர்தலை பாஜக. தனது சொந்தசக்தியில் சந்திக்க உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினையில் மிகமோசமாக நடந்துகொண்ட காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஜனநாயக முறைப்படி தண்டிக்கப் பட வேண்டும்.

தமிழகம், புதுச்சேரியில் ஒரு ஓட்டுக்கூட காங்கிரசிற்கு விழவில்லை என்ற தண்டனைதான் இலங்கை தமிழர்களுக்கு நாம்செய்யும் உயர்வு ஆகும்என்று அவர் கூறினார்.

பேட்டியின்போது பா.ஜ.க. மாநில இளைஞர் அணி தலைவர் பால கணபதி, மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் கமல குமார் , மாவட்ட தலைவர் பார்த்திபன், ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply