பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்திதை அரசியல் ஆதாயத்திற்கு பா.ஜ.க., பயன் படுத்தி வருவதாக கூறிய காங்கிரஸின் விமர்சனத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசியல் ஆதாயத்துக்காக பெங்களூரு குண்டு வெடிப்பிற்கு பா.ஜ.க உதவி இருப்பதாக காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ஷகீல் அகமதுவின் கருத்து பா.ஜ.க., வினரிடையே கடும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்ததாவது, பெங்களுரூ குண்டு வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல்தான் இதனை அரசியலாக்க காங்கிரஸ் முயற்சிப்பது துரதிஷ்ட வசமானது. மிகவும் கேவலமான ஒருசெயல். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் விலகி இருப்பதுதான் நல்லது. இந்தபேச்சிற்கு ‌சோனியா, பிரதமர் ஆகியோர் பதில்சொல்ல வேண்டும். இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்யும் விதமாக உள்ளது.

வெடிகுண்டு தாக்குதல்சம்பவத்தினை ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் பயன் படுத்துகிறது.இதுபோன்ற அரசியல் விளையாட்டு வேண்டாம் என்றார்.

Leave a Reply