மிர்சா ஹிமாயத் பெய்க்கிற்கு மரண தண்டனை மராட்டிய மாநிலம் புனேநகரில் உள்ள ஜெர்மன்பேக்கரியில், கடந்த 2010-ம் ஆண்டு சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. இதில் 17 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஒரேநபரான இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மிர்சா ஹிமாயத் பெய்க்கிற்கு மரண தண்டனையை நீதி மன்றம் விதித்துள்ளது.

அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று, அந்த குண்டு வெடிப்பில் 23வயது மகளை பறிகொடுத்த தந்தை வலியுறுத்தினார்.

மிகவும் எதிர் பார்க்கப்பட்ட இந்தவழக்கின் தீர்ப்பினை இன்று நீதிபதி வாசித்தார். அப்போது, ஜெர்மன்பேக்கரி குண்டு வெடிப்பில் கைதுசெய்யப்பட்ட ஒரே ஒரு குற்றவாளியான பெய்க்கின் குற்றம் நிரூபணமானதால், அவருக்கு மரணதண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

ஜெர்மன்பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கைதுசெய்யப்பட்ட பெய்க்கின் வீட்டிலிருந்து 1200 கிலோ வெடி பொருட்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் யாசின்பாத்கல் என்பவன் தான் பேக்கரியில் குண்டுவைத்தவன். தொடர்ந்து அவன் தலைமறைவாக உள்ளான்.

Leave a Reply