தேசம் தர்மம் தெய்வம்!! நம் பாரத நாட்டில் பிரித்து பேச முடியாத ஒன்று தான் " தேசம் தர்மம் தெய்வம் " என்பது . அதனால் தான் நம் நாட்டில் தோன்றிய மகான்கள், தீர்க்க தரிசிகள் அவதராங்கள் எல்லாம் சொல்லிய கருத்துக்கள் இந்தமூன்றையும் ஒன்றாகவே இணைத்து நமக்கு சனாதான தர்மம் என்று குடுத்து உள்ளனர்.

சுருக்கமாக சொன்னால் தேசம் என்பது – சபரி மலை இருக்கும் இடத்தை குறிக்கம் இடம். இந்த தேசத்தில் உள்ள புண்ணியஸ்தலம் என்போம்.

தெய்வம் என்று சொன்னால் சபரி மலையில் இருக்கும் சாஸ்தா ஸ்ரீ ஐயப்பன். தர்மம் என்பது நாம் அய்யப்பனுக்கு மாலை போடும் போது இருக்க வேண்டிய விரதங்கள். இந்த மூன்றும் நம் வாழ்வில் தவிர்த்து விட கூடாத இலட்சியங்கள். உதாரணங்கள் கீழே .

நம் சக்தி பீடங்களில் மிகவும் பழமையான டாகேஸ்வரி அம்மன் கோவில். நாம் பங்களாதேஷ் என்ற தேசத்தை இழந்தோம், தர்மம் போனது.

பாரதத்தின் மூலஸ்தான் என்று சொல்லகூடிய மூல்தான் என்ற இடம் இன்று பாகிஸ்தானுக்கு சொந்தம். நாம் தேசத்தை இழந்தோம், தர்மமும் போனது.

லாகூர் என்று சொல்லக்கூடிய லவபுரி. ஸ்ரீ ராம புத்திரன் லவன் வென்ற ஊர் – தேசத்தை இழந்தோம், தர்மம் போனது.

ஆகா நாம் இந்த நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றுடன் சொல்லப்படும் இந்த தேசம், தர்மம், தெய்வம் ஆகியவற்றை மறந்தால் தேசமும், தர்மமும் நம்மை விட்டு போய்விடும்.

நாம் பல மொழி, இனமாக வாழ்ந்தாலும் இந்த நாட்டில் கங்கையும் பசுவும் நம் எல்லோர்க்கும் புனிதம்.

இந்த நாட்டில் மொழிகள் வேறாக இருந்தாலும் புண்ணியஸ்தலங்கள் எல்லாமே " ஆ " என்ற எழுத்தில் தான் தொடங்குகின்றது . ஏன் இந்த நாட்டில் உள்ள எல்லா மொழிகளின் முதல் எழுத்தே " ஆ " என்று தானே ஆரம்பிகின்றது.

அதனால் தான் சுவாமி விவேகனானந்தர் சொல்கின்றார் " இந்த நாட்டின் ஆன்மா சமயம் இந்த நாடு என்று சமயத்தை மறைகின்றதோ அப்போது ரோமாபுரிக்கு நேர்ந்த கதை, கிரேக்கத்திற்கு நேர்ந்த கதை உலகில் பலம் பெரும் நாடு என்று சொல்ல கூடிய நம் பாரத தேசத்திற்கும் நேரும் ". நம் நாட்டை நேசித்த இரு மகான்கள் " விவேகனாந்தர் ராமேஸ்வரத்தில் இறங்கியது நாட்டை தெய்வமாக கருதி இந்த மண்ணில் விழுந்து வணங்கினார் " " இன்னொருவர் மஹா கவி பாரதி அவரும் அப்படியே வெளி நாடு பயணம் முடிந்து நம் நாட்டிற்கு வந்ததும் " மயிலை மண் வந்து இறங்கியதும் முதல் தாய் மண்ணிற்கு வணக்கங்களை செய்தார் ".

ஆகவே "தேசத்தை காப்பதும் " "தர்மத்தின் வழி நடப்பதும் " "தெய்வத்தை பற்றிகொல்வதும் " நம் பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.

இனி நம் வீட்டில் பிறக்க கூடிய ஓவ்வொரு ஆண் குழந்தைகளும் " விவேகானந்தர் போலவும், மஹா கவி பாரதி போலவும் " பிறக்கட்டும்.

Leave a Reply