பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்  கைது நீதிபதிகளை கூட்டாக சிறைவைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் ஜாமீன்மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடிசெய்தது. இதனை தொடர்ந்து அவர் இன்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ்முஷாரப் (67) ,2007-ம் ஆண்டு தனது ஆட்சியின்போது அரசியலமைப்பு சட்டத்தை மீறி அவசரநிலையை பிரகடன படுத்தினார்.அவசரநிலை பிரகடனப் படுத்திய கையோடு தலைமை நீதிபதி இப்திகார் முகமதுசவுத்ரி உள்ளிட்ட 60 நீதிபதிகளை சிறைவைத்தார்.

இதுதொடர்பான வழக்கு நேற்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் ஜாமினை நீட்டிக்ககோரி மனு செய்திருந்தார். அவரது ஜாமின்மனு தள்ளுபடியானது.
இந்த தீர்ப்பைகேட்டதும், முஷாரப், அவசர அவசரமாக நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி, தனது பண்ணை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த அப்பீல் மனுவும் தள்ளுபடியானது. இதை தொடர்ந்து தனது பண்ணை வீட்டிலிருந்த முஷாரப்பை போலீசார் இன்று காலை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்றனர்.

Leave a Reply