கோவை, திருப்பூர், நீலகிரியில் முழு அடைப்பு இயல்பு வாழ்க்கை முடங்கியது  கோவைகோட்ட இந்து முன்னணி சார்பில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

கோவை போத்தனூரில் திருமணமண்டபத்தில் நடைபெற்ற தாக்குதல், குனிய முத்தூரில் கோயில் சிலைஉடைப்பு, உதகையில் இந்து முன்னணி செயலாளர் மஞ்சுநாத் மீதான தாக்குதல், இதைக்கண்டித்து சுவரொட்டி ஒட்டச்சென்ற மூன்று பேர் மீது தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தை தொடர்ந்து , கோவை மாநகர், மாவட்டத்தில் 75சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது .

திருப்பூர் மாவட்டம்: திருப்பூரில் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
கடையடைப்பு காரணமமாக ரூ.70 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்

Leave a Reply