இந்து இயக்கங்களை சேர்ந்த தலைவர்களின்  மீது அதிகரிக்கும் தாக்குதல்  பா.ஜ.க  போராட்டத்தில் ஈடுபடும் இந்து இயக்கங்களை சேர்ந்த தலைவர்களின் மீது சமீபநாட்களாக தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதற்காக பா.ஜ.க போராட்டத்தில் ஈடுபடும் என்று மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்ஆர். காந்தி மீது 4 பேர் கொண்ட வன்முறை கும்பல் நடத்திய தாக்குதல்குறித்து கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

இந்து இயக்கங்களை சேர்ந்த தலைவர்களின் மீது சமீபநாட்களாக தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நடந்துவருகிறது. கட்சியின் மாநிலநிர்வாகி எச்.ராஜா வீடு மீது தாக்குதல்நடந்தது. வேலூரில் மருத்துவ அணிநிர்வாகி டாக்டர். அரவிந்த்ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். பரமக்குடியில் பா.ஜ.க கவுன்சிலர் முருகனும் கொலைசெய்யப்பட்டார்.

இப்போது நாகர் கோவிலில் மூத்தநிர்வாகி எம்ஆர். காந்தி தாக்கப்பட்டுள்ளார் . இது கண்டனத்துக்குரியது. இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக பாஜக போராட்டத்தில் ஈடுபடும் , இத்தாக்குதலை கண்டித்து நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பந்த் நடத்தப்படும். கடைகள் அடைக்கப்படும். இதற்கு சர்வ கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Leave a Reply