யார் தவறு செய்தாலும் கட்சியில் நீடிப்பதர்க்கான  தார்மீக உரிமையை இழக்கிறார்கள் பாஜகவில் யாராவது தவறுசெய்தால், அவர்கள் கட்சியில் நீடிப்பதர்க்கான தார்மீக உரிமையை இழக்கிறார்கள். எடியூரப்பா தவறு செய்துவிட்டு பாஜகவிலிருந்து விலகினார் என பாஜக தேசியதலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெல்காமில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக கொள்கை, கோட்பாடுகளை மையமாககொண்டு செயல் படும் கட்சியாகும். ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், ராஜிநாமா கொடுக்க வேண்டியது தான். முதல்வராக பதவிவகித்த போதுதான் செய்த தவறுகள்காரணமாக எடியூரப்பா, பாஜகவிலிருந்து விலக நேர்ந்தது.

ஊழல் குற்றச் சாட்டுகளில் சிக்கியதால்தான் பாஜகவில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார். பாஜகவிலிருந்து எடியூரப்பா விலகுவார் என கட்சி எதிர்ப் பார்க்கவில்லை.

இந்தியாவில் ஆட்சிநடத்திவரும் கட்சிகளில் முதலிடத்தில் பா.ஜ.க., உள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு ஊழலில் மூழ்கியுள்ளது. வரும் மக்களவைதேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்கும் என்றார்

Leave a Reply