கர்நாடகத்தில் பா.ஜ.க தனது அரசை தக்கவைத்து கொள்ளும் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா அரசு சிறந்த ஆட்சியை தந்துள்ளது . முதல்வர்களாக சதானந்த கௌடா, ஜெகதீஷ்ஷெட்டர் ஆகிய இருவரும் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்திறகாக ஹூப்ளிக்கு வந்த அத்வானி, செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது :

கர்நாடகத்தில் பாஜக மக்கள் நலன்சார்ந்த அரசாட்சியை அளித்துள்ளனர். இதை மனதில்வைத்து கர்நாடக மக்கள் மீண்டும் பா.ஜ.க.,வுக்கு வாக்களிப்பார்கள்.

எனவே, கர்நாடகத்தில் பா.ஜ.க தனது அரசை தக்கவைத்து கொள்ளும். பா.ஜ.க., அரசின் சாதனைகளை முன்வைத்து தேர்தல்பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம். பாஜக கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதில் சந்தேகம்வேண்டாம்.

நேருகாலத்தில் இருந்து இந்தியாவை ஆட்சிசெய்த அரசுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2 தான் மிக மோசமான மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியாகும். ஐ.மு., கூட்டணி அரசுக்கு பிரதமராக மன்மோகன்சிங் இருக்கிறார். ஆனால் ஆட்சி நிர்வாகத்தை மற்றொருவரான சோனியாகாந்தி நடத்திவருகிறார். பெயரளவுக்கு தான் மன்மோகன் சிங் பிரதமர். உண்மையான பிரதமராக சோனியாகாந்தி செயல்படுகிறார்.

அதிகாரம்படைத்த அனைத்து மத்திய அமைச்சர்களும் ஊழல்புகாரில் சிக்கியுள்ளனர். இப்படிப்பட்ட ஊழல் அரசுக்கு மக்கள் தேர்தலில் தகுந்தபாடம் புகட்டுவார்கள்.

பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை நியமிப்பதற்கு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்தகேள்விக்கு பதிலளிக்க மறுத்த அத்வானி, இது பற்றிய விவாதம் தேவை இல்லாத ஒன்று.

கட்சியின் நாடாளுமன்ற குழுவில் இது குறித்து விவாதம் நடைபெறாததால், அதுபற்றி கேள்வியே எழவில்லை. எனினும், இந்தவிவகாரத்தில் தகுந்தநேரத்தில் எனது கருத்தை தெரிவிப்பேன் என்றார் அவர்.

Leave a Reply