குமரி மாவட்டத்தில் பாஜகவின் முழுஅடைப்பு போராட்டம் வெற்றி குமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் நடத்திய முழுஅடைப்பு போராட்டம் வெற்றிபெற்றதாக பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்னன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது :

நாகர்கோவிலில் மர்மநபர்களால் தாக்கப்பட்ட எம்ஆர்.காந்தி அனைத்து தரப்புமக்களாலும் நேசிக்கப்பட்டவர். அவரை தாக்கியிருப்பது பெரும்கண்டனத்துக்குரியது. எனவேதான் பாஜக இங்கு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தது.

இதற்கு பயங்கர வாதத்தை எதிர்ப்போர் அனைவரும் ஆதரவுதெரிவித்தனர். தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்த இப்போராட்டத்துக்கு ஆதரவுதெரிவித்தனர். பொதுமக்களின் ஒத்துழைப்பால் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்களும் ஓடவில்லை. இதனால் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது.

இதற்கு பிறகாவது இதை போன்ற செயல்கள் நடைபெறாமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். எம்,ஆர்.காந்தியை தாக்கியவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும். அதற்கு அரசு உடனடி முயற்சி மேற்கொள்ளவேண்டும்.என்று அவர் கூறினார்.

Leave a Reply