டில்லி இந்தியாவின் தலைநகரம் என்றொரு நிலை மாறி கற்பழிப்பு காமுகர்களின் கூடாரம் என்றொரு நிலைக்கு மாறி விட்டது. 5ந்து வயது சிறுமியையும் கர்ப்பழிக்கிறார்கள். 60து வயது கிழவியையும் கர்ப்பழிக்கிறார்கள். 6 பேர் சேர்ந்து ஒரு பெண் என்றும் பாராமல் கற்பழித்து நாசம் செய்து குப்பையை தூக்கி வீசுவதை போன்று தூக்கி வீசி செல்கிறார்கள். .

கடந்த டிசம்பர் மாதம் தான் ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கிவீசப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம், நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது . சரி அத்துடன் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை . கடந்த ஏப்ரல் 18ம் தேதி இரண்டு வயது சிறுமியை ராஜ்திர் என்பவர் கற்பழித்து காவல்துறையிடம் மாட்டியுள்ளார்

ஏப்ரல் 17ம் தேதி கிழக்கு டெல்லியில் மழலையர் பள்ளியில் படித்த 5ந்து வயது சிறுமியை அவரது ஆசிரியரே கற்பழித்துள்ளார். அதே ஏப்ரல் 17ம் தேதி கிழக்கு டெல்லியில் 10ம் வகுப்பு மனைவியை சிலர் கூட்டாக கற்பழித்துள்ளனர் .

ஏப்ரல் 14ம் தேதி கிழக்கு டெல்லியில் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 10 த்து வயது பெண்ணை பக்கத்து வீட்டுக்காரரே கடத்தி சென்று கர்ப்பழித்துள்ளார்.

மேலும் கிழக்கு டெல்லி பகுதியில் 13 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் சுமார் ஒரு வார காலம் மிருகத்தனமாக கற்பழித்துள்ளனர் . பிறகு சலுப்பு தட்டியதோ என்னவோ அவரது வீட்டில் கொண்டுவந்து விட்டுள்ளனர். அதுவரை புகார் தெரிவித்திருந்தும் காவல்துறையால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை

இந்நிலையில் டில்லியின் கிழக்கு பகுதியில் உள்ள, காந்தி நகரில், ஐந்து வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு . பலத்த காயங்களுடன் மருத்துவமனையில், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது அதிர்ச்சி தருகிறது என்றால். இது குறித்து காவல் நிலையத்தில், புகார் கொடுத்த பெற்றோரிடம், 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்து, இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடும்படி மிரட்டி பேரம் பேசிய காவல்துறையின் நடவடிக்கை பேரதிர்ச்சியை தந்துள்ளது.

கற்பழிப்பு குற்றங்களை காவல்துறையே காசுகொடுத்து கட்டபஞ்சாயத்து செய்து மறைக்க முயன்ற நிகழ்ச்சி டெல்லி காவல்துறையின் நிர்வாக திறனை படம்பிடித்து காட்டுகிறது. கடந்த மூன்று மாதத்தில் மட்டும் டெல்லி.,யில் 393 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . பதிவு செய்யப்பட்டதே 393 என்றால் உண்மையில் நடந்தது 1000த்தை தாண்டும் என்கிறார்கள்.

எங்கே செல்கிறது நமது தலைநகரம், காமுகர்களின் கூடாரமாக மாறி கொண்டிருக்கிறதா? . காமுகர்களை பாதுகாப்பதே காவல்துறையின் கடமையாகி விட்டதா?. டெல்லியில் ஒரு சீக்கியர் ஜனாதி பதியாக இருந்த போதுதான் ஆயிரகணக்கான சீக்கியர்கள் வேட்டையாடபட்டர்கள் கொள்ளப்பட்டார்கள் . அதே  டெல்லியில் தான் ஒரு பெண் தற்போது முதல்வராக இருக்கும் போதே ஆயிர கணக்கான பெண்கள் காமுகர்களால் வேட்டையாடப் படுகிறார்கள் கற்பழிக்கப் படுகிறார்கள் .

இதற்க்கு மேல் யாரையும் சட்டத்தால் தண்டிக்க முடியாது . இருக்கும் சட்டங்களே போதுமானது , இதற்க்கு மேல் சட்டத்தை திருத்தவும் முடியாது . மக்களின் மனநிலையில் தான் மற்றம் வேண்டும் என்று ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் கூறுகிறார். ஆம் மக்களின் மனநிலைதான் மாறவேண்டும் அந்த மாற்றம் காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறிவதாக இருக்க வேண்டும் .

தமிழ்தாமரை VM . வெங்கடேஷ்

Leave a Reply