ஊழல் நிறைந்த காங்கிரஸ்  அரசின் ஆட்சி கர்நாடகாவுக்கு வேண்டுமா மத்திய அரசு தனது காலம் முடிவதற்குள் தேர்தல்வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் மத்திய அரசை தப்பிக்க விடமாட்டோம். மோடியை பொறுத்த வரை அவர் முதல்வர்களில் மூத்தவர் என்பதினால் அவர் பாராளுமன்ற ஆட்சி மன்றக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்வானியை நாங்கள் புறந் தள்ளவில்லை. என்று சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்கவோ கட்டு படுத்தவோ காங்கிரஸ் அரசு தவறிவிட்டது; பெண்கள் பாதுகாப்பிற்கும் மிககுறைந்த அளவே காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது; அதுவும் மக்களின் நாடு தழுவிய போராட்டத்தால் நடைபெற்றது; இத்தகைய அரசின்ஆட்சி கர்நாடகாவில் இருக்கவேண்டுமா என்று கர்நாடகா வாக்காளர்கள் ஓட்டளிக்கும் முன் சிந்திக்கவேண்டும் என்றார்.

Leave a Reply