பிரதமரின் மூக்குக்கு கீழேகூட, பாலியல் பலாத்காரங்கள் பிரதமரின் மூக்குக்கு கீழேகூட, பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுகின்றன் என்று , காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர்களில் ஒருவரான, நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.

.பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி முதல் அரசின்போது, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் இவர்  ராஜஸ்தானில் நடந்த பா.ஜ.க , பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் சேர்ந்து கலந்துகொண்டார் .

அதில்அவர் பேசியதாவது:கடந்த,9 பது ஆண்டுகளாக, பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில், நாடு மிகமோசமான நிலையை அடைந்து விட்டது. பிரதமரின் மூக்குக்கு கீழேகூட, பெண்கள், சிறுமியர் பாலியல்பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இந்நிலை நீடித்தால், இன்னும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.பெண்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்

மேலும் ராஜஸ்தானில், வசுந்தரா மீண்டும்முதல்வராக எனது ஆதரவு அவருக்குண்டு என்று தெரிவித்தார்

Leave a Reply