கர்நாடகா சட்டசபைக்கு மே 5-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது . வேட்புமனுதாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் கர்நாடகத்தில் தேர்தல்பிரசாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்துவருகிறார்கள்.

இந்நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதி பெங்களூர் நேஷனல்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரசார பொது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வருண்காந்தி வருகிற 26 , 27 ஆகிய இரண்டு நாட்கள் ஊப்ளி மற்றும் மங்களூரில் பிரசாரம்செய்வார் என்றும், முன்னாள் முதல் மந்தரி உமாபாரதி பெங்களூர் மண்டலத்தில் இரண்டு நாட்கள் ஆதரவுதிரட்டுவார் என்றும் கூறப்படுகிறது. அத்வானி 24 , 25 ஆகிய 2 நாட்கள் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம்செய்ய உள்ளார்.

Leave a Reply