மோடியுடன் ஒப்பிட்டாள் , ராகுல்காந்தி ஒரு பெரிய பூஜ்ஜியம் குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடியுடன் ஒப்பிடுகையில், ராகுல்காந்தி ஒரு பெரிய பூஜ்ஜியம் என்று மத்தியப்பிரதேச பாரதீய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்த்து மேலும் தெரிவித்திருப்பதாவது ; மோடியுடன் ஒப்பிட்டால் , ராகுல்காந்தி ஒருபெரிய பூஜ்ஜியம் தான் என்பதை காங்கிரசாருக்கு மிகநன்றாக தெரியும். கனவில்கூட மோடியை கண்டு அவர்கள் அலறுகிறார்கள்.

டெல்லியில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கில் பேசிய ராகுல்காந்தியின் பேச்சு, நாட்டுமக்களை பெரிதும் வெறுப்படைய செய்திருக்கிறது. இங்கு அவரது 2 நாள் சுற்றுப் பயணம் வெறும் வீண் உடற் பயிற்சி என்பதை நிரூபிக்கும்.

மைனாரிட்டியாக இருக்கும் சமுதாயத்தினர் குஜராத்தில் நிம்மதியாக தான் வாழ்கிறார்கள் . மோடியின் ஆட்சி அங்கு சிறப்பாக உள்ளது . ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசால் , நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கூட கொடுக்க முடியவில்லை . பெண்களுக்கான பாதுகாப்பில் தோல்வியை தழுவியுள்ளது என்றார்.

Leave a Reply