காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியும் தாலிபானுக்கு வரவேற்பும்! காஷ்மீரில் உள்ள ஹரி பிரபாத் கோட்டையின் வெளிச்சுவற்றில் பாகிஸ்தான் கொடியும் தாலிபான் கொடியும் மாட்டப்பட்டுள்ளன.

“இந்தியாவே வெளியேறு”, “தாலிபானுக்கு நல்வரவு” போன்ற கோஷங்களும் சுவற்றில் எழுதப்பட்டுள்ளன.

இந்தக் கோட்டைக்குள் மத்திய ரிசர்வ் காவல் படை முகாம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

“இதைப் பிரிவினைவாதிகளோ அல்லது பயங்கரவாதிகளோ செய்திருக்க வாய்ப்பில்லை; ஒரு சில விஷமிகள் கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்த காரியமாக இருக்கலாம்” என்று பாதுகாப்புப் படையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆயினும் இது அலட்சியமாகப் புறந்தள்ளக்கூடிய விஷயமல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply