பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா  அலுவலகத்திலிருந்து  வெடிகுண்டுகள் , ஆயுதங்கள் பறிமுதல் கேரளாவில் பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடிசோதனையில் வெடிகுண்டுகள் உள்பட பயங்கரஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன . 21 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளன.

கேரளமாநிலம் கண்ணூர் மாவட்டம் மையில் அருகே நாராத்து என்ற பகுதியில் அமைந்திருந்த கட்டிடத்தில் சிலர் ரகசியமாக ஆயுதபயிற்சி செய்வதாக மையில் காவல்துறைக்கு ரகசியதகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர் .

அங்குள்ள தென்னந்தோப்பில் சணல் எனும் பெயரில் அறக்கட்டளை அலுவலகம் ஒன்று செயல்பட்டுவந்தது தெரியவந்தது. அந்த கட்டிடத்தில் சிலர் ரகசியமாக ஆயுதபயிற்சி செய்வது கண்டுபிடிக்கபட்டது.

காவல்துறையினர் அங்கு அதிரடியாகபுகுந்து சோதனை நடத்தினர். அங்கு ஏராளமான சக்திவாய்ந்த வெடிகுண்டுகள், அரிவாள்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன் படும் மூலப்பொருட்கள், தேசவிரோதத்தை தூண்டும் வகையிலான துண்டுபிரசுரங்கள், ஈரான் நாட்டைசேர்ந்த அடையாள அட்டைகள், பயங்கர ஆயுதங்கள் பறி்முதல்செய்யப்பட்டன.

காவல்துறையினர் உள்ளே நுழைந்தபோது அங்கு சிலர் ஆயுதபயிற்சி நடத்தி கொண்டிருந்தனர். தப்பி ஓடமுயன்ற அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். நாரத்து பகுதியை சேர்ந்த அப்துல்சமது, அசீஸ், ஹஜ்மல் உள்பட 21பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவர்கள் அனைவரும் பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களுக்கு பலதீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 21 பேரையும் காவல்துறையினர் ரகசிய இடத்தில்வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply