தனக்குமேல் தலைவனில்லாதவர் விநாயகர் தனக்குமேல் தலைவனில்லாதவர் விநாயகர்.எல்லா எழுத்துக்களுக்கும் அவரே முதல். என்று தோன்றியது என அறியாத அனாதி காலம் முன்னே மாபெரும் காப்பியம் மஹாபாரதத்தை எழுதியவர். ம்னித வாழ்க்கையின் லௌகீக போக்கு அதன் ஊடாக நீக்கமற நிறைந்த ஞான இழையோடிய இக,பர தத்துவ காப்பியம், எழுத்தில் வடித்தவர் கணபதி. எனவே எழுத

ஆரம்பிக்குமுன் ஒரு பிள்ளையார் சுழி. பிள்ளையார் என அழைக்கும் போதே ஒரு அருகாமை உணர்வு. இறைவன்,இறைவி வ்ழித்தோன்றல் – எனவே பிள்ளையார்.

இறைவனும்,இறைவியுமே பிரபஞ்சம் என உணர்த்திய கணநாயகன். இறைவனாலேயே முழுமுதற் கடவுளாக பூஜிக்கப்பட்டவர்.ஓம் எனும் ஒலியே ஆதி ஒலி எங்கும் நீக்கமற நிறைந்த ஒலி அதன் வடிவம் பிரணவ மூர்த்தி.

மூலாதார வ்டிவம் முழுமுதற் கடவுள் தடைகளை வேரறக்கும் குணம் பிரபஞ்சமே வ்யிறு அதன் மீது ஓம்கார வ்டிவான மந்தகத்துடன் கூடிய துதிக்கை.

"அகளமாய் நின்றது.. சகளமாய்" என்பது போல் சிறிய மஞ்சளிலும் விஸ்வரூபதிலும் ஹேரம்ப கணபதி. வலிமை தரும் வல்லப கணபதி என்ன பெயரிட்டாலும் பெயர்கடந்த விளக்கமாய் விளங்கும் சக்தி கணபதி.

மனிதன் எத்தனை கோடியோ அத்தனை கோடி மனம் ஒருவன் தன் மனதின் படியே உலகத்தை பார்க்கிறான் அப்படியானால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உலகம். ஒருவர் எற்பதை ஒருவர் நிராகரிப்பார் கண்டனம் செய்வார். இது இயற்கை இயல்பு, ஆனால் ஒரு தெய்வத்தை மனதில் இருத்தி ஒரு உபாசனையோடு ஒன்றியிருக்க முயலும்போது மனித மனம் எல்லாம் சத்தியத்தின் திசையில் பரம்பொருளை நாடிச் செல்கின்றன. இதை காரண காரியங்களுடன் விளக்கி, விவாதம் செய்து கொண்டு போனால் அனைத்து மதங்களின் முடிவும் ஒன்றுதான் அதாவது தோற்றங்களும் முடிவும் அற்ற சொல்லும்,பொருளும் கடந்த எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் தான் என்பது தெளிவாகிவிடும்.

பரம்பொருள் நிர்குண – சகுண வடிவானது நிர்குணம் உணரக்கூடியது உணர்ந்தால் அதுவே நம் இயல்பு. அதாவது தன்னிலை மறந்து தூங்குகிறோம் என்றால் தன்னிலை மறப்பது உடம்பா? உயிரா? உடம்பு ஒர் கருவி. மனம் அதைக்கொண்டு அனுபவங்களின் ஊடே பிரம்மமாக்க முயல்வது. நம்மவர்கள் பிரம்மத்தை சகுணமாக்கி – உருவமாக்கி பக்தியின் மூலம் மனம் ஒன்ற் செய்கிறார்கள். யானை முகத்தில் ஆரம்பித்து குரங்கு முகத்தில் வழிபாடுகளை முடித்திருக்கிறார்கள். ஆம், பக்திவழியே ஞான நிலையை அடைய மூலாதார வடிவான கணபதியை பூஜித்து பின் மெல்ல சிவன், விஷ்ணு, அம்பிகை, என முப்பது முக்கோடி தெய்வங்களையும் வணங்கி ஆஞ்சநேயர் வழிபாட்டில் முடியும். ஆஞ்சநேயர் – மனம். மனம் ஒரு ஆஞ்சநேயர் அது பக்தி(ராம பக்தி)யில் லயப்படும் போது பிரபஞ்சம் வசப்படும் இராமன் உயர் லட்சியம்,சத்யம்.

"சத்யம், ஞானம்,ஆன்ந்தம்,ப்ரம்ம " என்றுதான் உபநிஷதம் உரைக்கிறது. மனித வாழ்வின் முடிந்த நிலை, லட்சியம், பரமானநத நிலை. இதுவே பாரதத்தில் பிறப்பின் நோக்கம். வெற்றி லௌகீகமாக இருந்தாலும் பரமார்த்திகமாக இருந்தாலும் தடையற்று காரியமாற்ற விநாயகனை வணங்கி காரிய சித்தியடைவோம்

நன்றி ; – ஜயமித்திரன்

Leave a Reply