நரேந்திரமோடி பிரதமாவதை தடுக்க வெளிநாடுகள் சதி நரேந்திரமோடி பிரதமாவதை தடுக்க வெளிநாடுகள் சதி செய்கின்றன என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ;

இந்தியாவின் பாரம்பரிய சின்னமான ராமர்பாலத்தை எக்காரணம் கொண்டும் இடிக்க கூடாது. இந்திய எல்லைப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில், சல்மான்குர்ஷித் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்பது சரியல்ல. இதில் பேச்சு வார்த்தை நடத்த என்ன இருக்கிறது?. சீனாவை அடித்து விரட்ட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்துவது பலவீனம்மட்டுமல்ல, நமது கையாளாக தனத்தை காட்டுகிறது. இதனை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமராக வர வேண்டும். அவர் திறமைசாலி, தகுதியானவர், அவரால் பல பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண முடியும். நரேந்திரமோடி பிரதமராக வராக்கூடாது என்பதற்காக வெளிநாடுகள் சதிசெய்கின்றன என்றார்.

Leave a Reply