ஜெகதீஷ்ஷெட்டரின் சாதனைகளை முன்வைத்து, சட்டப் பேரவைத் தேர்தலை எதிர் கொண்டுள்ளோம் கர்நாடகமாநில வளர்ச்சியில் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டரின் சாதனைகளை முன்வைத்து, சட்டப் பேரவைத் தேர்தலை எதிர் கொண்டுள்ளதாக பா.ஜ.க., மூத்த தலைவர் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மங்களூரில் அவர் வெள்ளிக் கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 5 வருடத்தில் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை பா.ஜ.க., அரசு செய்துள்ளது. குறிப்பாக, கடந்த 9மாதங்களில் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தலைமையில் வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்தியுள்ளதில் சாதனை நிகழ்த்தப்பட்டது. இதைமுன்வைத்து கர்நாடக சட்டப் பேரவைத்தேர்தலை எதிர் கொண்டுள்ளோம். தேர்தலுக்குப்பிறகு முதல்வராக மீண்டும் ஜெகதீஷ் ஷெட்டர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply