ராகுல்காந்தியின் பேச்சு  சாத்தான் கீதை ஓதுவதை போன்றது ஊழலை பற்றி காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி பேசுவது சாத்தான் கீதை ஓதுவதை போன்று உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் அவர் கலந்து கொண்டு மேலும் அவர் பேசியதாவது ; காங்கிரஸின் ஊழல் பூமியோடு நின்று விடவில்லை அதையும்தாண்டி ஆகாயத்தை தொட்டு விட்டது , பாதாளத்தையும் தொட்டு விட்டது . இந்த அரசு காங்கிரஸ் மூன்று உலகங்களிலும் தனது ஊழல்சிறகை விரித்துள்ளது. மேலும் ஊழலைப்பரப்ப அதற்கு இடமில்லை.

பா.ஜ.க.,வை குறை கூறும் முன்பு ராகுல் ஐ.மு., கூட்டணி அரசின் இமேஜை முதலில் ஒழுங்கு படுத்தட்டும். பலலட்சம் கோடி ஊழல் வழக்குகளில் காங்கிரஸுக்கு தொடர்புண்டு . கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு பிறர் மீது கல்லை வீசக்கூடாது என்ற பொது அறிவுகூட காங்கிரஸுக்கு இல்லையே.

பாஜக.,வில் என்னதான் உட்கட்சிபூசல் இருந்தாலும் அது மாநிலத்தின் வளர்ச்சியை ஒருபோதும் பாதித்ததில்லை. காங்கிரஸில் ஒற்றுமையே இல்லை. முதல்வர்பதவிக்கு வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸில் ஒருமுறையும் இல்லை. அதனால் முதல்வர் பதவிக்கு பலர் அடித்துக்கொள்கின்றனர். ஆனால் பா.ஜ.க.,வின் நிலை அப்படி இல்லை. ஜெகதீஷ் ஷெட்டர்தான் முதல்வர் வேட்பாளர் என நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம் என்றார்.

Leave a Reply