காஷ்மீர் மாநில லடாக்பகுதியில் உள்ள தெப்சாங் பள்ளத்தாக்கிற்குள் இருவாரங்களுக்கு முன்பு சீனா ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்து வெளியேறுமாறு சீனாவிற்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துவருகிறது.

இந்நிலையில் புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு கூறியதாவது:-

லடாக்பகுதியில் சீனா அத்துமீறி ஊடுருவியிருந்தும், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் அங்கு பேச்சு வார்த்தைக்கு செல்லவுள்ளார். இது மிகவும் கவலை தருகிறது . எனவே, சீனாவுடன் பேச்சு வார்த்தைக்கு செல்வதை பிரதமர் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய பகுதியிலிருந்து சீன ராணுவம் வெளியேறும வரை பெய்ஜிங்கிற்கு எந்தவிதப்பயணமும் மேற்கொள்ள கூடாது. கடந்த 2010-ம் ஆண்டு இந்திய-திபெத் எல்லைபோலீசாரின் கண்காணிப்பில் விடப்பட்ட அப்பகுதிகள், மீண்டும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். நாடு மிகமோசமான விளைவுகளை சந்தித்துவரும் வேளையில் கால தாமதமின்றி அது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply