காங்கிரஸ் அலை வீசியது உண்மைதான் கர்நாடகாவில் ஒரு வாரத்துக்கு முன்புவரை காங்கிரஸ் அலை வீசியது உண்மைதான். ஆனால், தற்போதைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என, கர்நாடக முதலவர் ஜகதீஷ்ஷட்டர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டப் பேரவை தேர்தல் கருத்துக் கணிப்பில் முதலிடத்தில் காங்கிரஸ் தான் உள்ளது என்றும், அதற்கடுத்து பின்தங்கிய நிலையில்தான் பா.ஜ.க., உள்ளது என்றும் கருத்துகணிப்புத் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் ஷட்டர், “ஒருவாரத்துக்கு முன்பு வரை கர்நாடகாவில் காங்கிரஸ் அலை வீசியது உண்மை தான். ஆனால், பா.ஜ.க.,வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்தபின்னர், நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இப்போது மீண்டும் கர்நாடகாவில் பா.ஜ.க., அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்ததேர்தலில் கண்டிப்பாக பாஜக வெற்றிபெறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

Leave a Reply