சரப்ஜித்சிங், லாகூர்‌ மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி அதிகாலையில் உயிரிழந்தார் பாகிஸ்தான் சிறையில் கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங், லாகூர்‌ மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

1990ம் வருடம் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் கோட்லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித்சிங்கை சககைதிகள் சிலர் கடந்த 26ம் தேதி கொடூரமாக தாக்கினர். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த அவர், லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை ஒருமணியளவில், சரப்ஜித்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவக்குழுவின் தலைவர் சௌகத் தெரிவித்தார்.

சரப்ஜித் சிங்கை சந்தித்துவிட்டு நேற்றுதான் அவரது குடும்பத்தினர் இந்தியா திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply