சரப்ஜித் சிங்கின் மறைவு மிகவும் வருத்தத்து குரியது சரப்ஜித் சிங்கின் மறைவு மிகவும் வருத்தத்து குரியது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார் .

சரப்ஜித் சிங் மரணமடைந்த செய்திகிடைத்த சில மணி நேரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது: சரப்ஜித் சிங்கின் மறைவு மிகவும் வருத்தத்து குரியது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை அவரது குடுபத்த்துக்கு இறைவன் அளிக்கவேண்டும். இந்திய, பாகிஸ்தான் அரசுகள் சரப்ஜித்சிங் விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தியுள்ளன. இந்தவிவகாரத்தில் உண்மைகள் வெளிவரவேண்டும்.

பாகிஸ்தானின் மனிதாபிமானம் அற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியான பதிலடியை மத்தியஅரசால் அளிக்க முடிய வில்லை. சமீபத்தில் 2 இந்திய வீரர்களின் தலை துண்டிக்கப் பட்டது, இப்போது சரப்ஜித் சிங் இறப்பு உள்ளிட்டவை இதற்கு எடுத்துக்காட்டாகும்.

Leave a Reply