சீன விவகாரத்தில் அரசிடம் குழப்பமான   நிலை  காணப்படுகிறது   இந்தியாவின் எச்சரிக்கைகையை மீறி ஊடுருவிய பகுதிகளில் சீனா தனது ராணுவத்தினரை குவித்துவருவதால் எல்லை பகுதியில் பதற்றம் நீடித்துவருகிறது.

காஷ்மீரின் லடாக் பகுதியில் அமைந்துள்ள தவ்லத் பார்க் ஆல்டியில் 19 கி.மீ வரை ஊடுருவியுல்ல சீன ராணுவத்தை சேர்ந்த 50 வீரர்கள் 5 கூடாரங்களை அமைத்து பாதுகாப்பு அரனை உருவாக்கியுள்ளனர். பிரச்சனைக்கு தீர்வுகாண இருநாடுகளை சேர்ந்த பிரேகிடியர்கள் மட்டத்திலான 3 கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.

ஊடுருவிய பகுதியில் சீன இராணுவத்தினர் இது எங்கள்பகுதி என பேனர்களை வைத்துள்ளனர். இதனையடுத்து ஆளில்லா

விமானங்கள் மூலம் கண்காணிப்பை இந்தியா தீவிரப் படுத்தியுள்ளது. எனினும் தொடர்ந்து வீரர்களை அதிகரித்துவருகிறது

இதனிடையே சீன ஊடுருவல் விவகாரத்தில் குழப்பமான முரண்பட்ட நிலை அரசிடம் காணப்படுவதாக பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத்சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply