நாட்டின்  மின்வெட்டுக்கு மத்திய அரசே காரணம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசே காரணம் என மங்களூரில் நடந்த தேர்தல்பிரச்சாக் கூட்டத்தில் நரேந்திரமோடி, குற்றம் சுமத்தியுள்ளார். கர்நாடக சட்ட பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரண்டாம் கட்டத்தேர்தல்

பிரச்சாரத்துக்கு நேற்று தனிவிமானம் மூலம் கர்நாடகா வந்த நரேந்திர மோடி, மங்களூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

அவர் பேசியதாவது “இந்தியாவில் 30 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி தடைபட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசு தான் காரணம். போதுமான அளவு நிலக்கரியை மத்திய அரசு தராததால் தான் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைநகரான டெல்லியில் காங்கிரஸ்ஸின் ஆட்சி நடக்கிறது .அனால் அங்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களான பாலியல்பலாத்கர சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதைத்தடுக்க டெல்லியில் ஆளும் காங்கிரஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குஜராத்துக்கு வெறும் 2 மணிநேரம் மட்டுமே மின்சாரம் அப்போது இருந்த அரசால் வழங்கப்பட்டது . ஆனால், நான் ஆட்சிக்கு வந்தபிறகு தடையில்லா மின்சாரம் குஜராத்துக்கு கிடைத்துவந்தது. இப்போது மத்திய காங்கிரஸ் அரசு, குஜராத்திலும் தொடர்மின்சாரம் வழங்க முடியாதபடி, வழங்கிவந்த நிலக்கரியின் அளவை குறைத்துவிட்டது. இப்போது குஜராத்திலும் மின் வெட்டு நிலவிவருகிறது. இப்படி நாட்டில் நடக்கும் அனைத்தும் மின் பற்றாக் குறைக்கும் மத்திய அரசே தான் கரணம்.”என்றார்

Leave a Reply