பாகிஸ்தானுடனான  தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும் பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித்சிங் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புதெரிவிக்கும் விதமாக அந்நாட்டுக்கான இந்தியதூதரை உடனே திரும்ப அழைத்து தூதரகஉறவை முறித்துக் கொள்ளவேண்டும் என பாஜக. தலைவர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ,

இனிமேல் இதை போன்ற சம்பவங்கள் தொடராதவகையில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாகிஸ்தானிலிருந்து நமது நாட்டின் தூதரை திரும்ப அழைக்கவேண்டும். அந்நாட்டுடனான அனைத்து தூதரக உறவை முறிக்கவேண்டும். வெளிநாட்டு கொள்கையை கடுமையாக்கவேண்டும். இந்த மத்திய அரசின் நடவடிக்கைகள், சர்வதேசஅளவில் இந்தியாவின் புகழை மங்கச் செய்கிறது. சரப்ஜித் சிங் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீட்டுதொகையும், அரசு வேலை வாய்ப்பும் வழங்கவேண்டும். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு பாஜக முழுஒத்துழைப்பு வழங்கும் என்றார் அவர்.

Leave a Reply