காங்கிரஸ் கட்சி ஊழலிலேயே பிறந்து ஊழலிலேயே வாழ்கிறது மத்தியஅரசின் நிலக்கரி ஊழலை கண்டித்தும், சி.பி.ஐ.,யில் மத்திய அரசின் தலையீட்டைகண்டித்தும் தமிழக பாரதிய ஜனதா சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது, இந்த காங்கிரஸ் கட்சி ஊழலிலேயே பிறந்து, ஊழலிலேயே வளர்ந்து, ஊழலிலேயே வாழ்கிறது. இதுவரை சொல்லப்பட்ட இந்த மத்திய அரசின் மிகப்பெரிய ஊழலான 2ஜியைவிட தற்போது மாபெரும் ஊழல் நிலக்கரிதுறையில் நடந்துள்ளது.

1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல் நிலக்கரிசுரங்கத்தில் நடந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சி.பி.ஐ.,யை மத்திய அரசு தவறாக பயன் படுத்தி வருகிறது. எங்கள் கோரிக்கைகளை தமிழகமக்களின் சார்பாக இந்த ஊழல் பற்றி தமிழக கவர்னரிடம் மனுவாக அளிக்கஉள்ளோம். கட்சத் தீவை மீட்க தமிழக சட்ட சபையில் தீர்மானம்கொண்டு வந்ததை பா.ஜ.க., முழுமனதோடு ஆதரிக்கிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்கும் போது முதலில் எதிர்த்தது பா.ஜ.க.,தான். என்று பேசினார்.

Leave a Reply