ஷாநவாஸ் உசைன் உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசைன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு உடல் நலகுறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என பீகார் பாஜக தலைவர் மங்கள்பாண்டே தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. வாயு அடைப்பால் அவருக்கு இந்ததொல்லை ஏற்பட்டுள்ளது மங்கள்பாண்டே தெரிவித்தார். இதுகுறித்து கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தொலைபேசி வழியே பேசி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் என்று கூறப்படுகின்றது.

Tags:

Leave a Reply