மத்திய அரசு, மருமகன்கள் ,மாமாக்களை பற்றி மட்டுமே கவலைகொள்கிறது மத்தியஅரசு, மருமகன்கள் ,மாமாக்களை பற்றி மட்டுமே கவலைகொள்கிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, மத்திய அரசை கேலி செய்து பேசியுள்ளார் .

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு மேலும் பேசியதாவது;

மத்திய ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சாலின் உறவினர் லஞ்சம்பெற்றது குறித்து மத்திய அரசை கிண்டல்செய்து பேசினார்.நரேந்திரமோடி பேசியதாவது:நான், அத்வானி போன்றோர், சர்தார் சரோவர் அணையில் கதவுஅமைக்க, மத்திய அரசின் அனுமதிகோரி, பிரதமரிடம், பலமுறை முறையிட்டுள்ளோம். ஆனால், இதுவரை அவர் அதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை.அணையில் கதவு அமைப்பதின்மூலம், குஜராத் மட்டுமின்றி, காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிராவிலும், தண்ணீர் பற்றாக் குறைக்கு தீர்வுகாணப்படும்.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மருமகன்கள் மாமாக்கள் பற்றிய பிரச்னைகளில் மட்டுமே அக்கறைகொண்டுள்ளது. கல்பசார் அணைக்கான பணிகள் முடியும் நிலையில் உள்ளன. அந்த பணிகள் முடிவடைந்தால், சவுராஷ்டிரா பகுதியில் அடுத்த, 100 ஆண்டுகளுக்கு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply