பவன் குமார் பன்சால்,  அஸ்வனி குமார் உள்ளிட்டோர் ராஜினாமா செய்யவேண்டும் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால், சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் உள்ளிட்டோர் , தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும்; அல்லது பதவி நீக்கம் செய்யவேண்டும்’ என்று , பாஜக செய்தித் தொடர்பாளர், ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார் .

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஆளும் காங்கிரஸ், ஊழலில் திளைக்கிறது; ஊழல்செய்யும், தன் அமைச்சர்களை காப்பாற்றுகிற து. ஆனால், கூட்டணிகட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் மீதான ஊழல்புகார்கள் மீது, வேறுவிதமான நடவடிக்கை எடுக்கிறது. தன் அமைச்சர்களை காப்பாற்றமுற்படும் இந்த அரசு, கூட்டணி கட்சிகளின் அமைச்சர்களை காட்டிக்கொடுக்கிறது; அவர்களின் பதவிகளை பறிக்கிறது.என்றார்

Leave a Reply