நிர்வான நடனம் ஆடிய காங்கிரஸ் மாண வரணி தலைவர்  சஸ்பெண்ட் காங்கிரஸ் கட்சியின் மாண வரணியான நேஷனல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன்ஆஃப் இந்தியாவின் மும்பை பிரிவு தலைவர் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் குடித்து விட்டு நிர்வாணமாக ஆடியதற்காக சஸ்பெண்ட் செய்யபபட்டுள்ளார்.

மும்பையின் புறநகர் பகுதியான கன்டிவ்லியில் கடந்தமாதம் காங்கிரஸ் கட்சியின் மாணவரணியான நேஷனல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் ஆஃப் இந்தியாவின் முகாமில் நடந்த விழாவில் மாணவர் அணியின் மும்பைபிரிவு தலைவரான சூரஜ்சிங் தாகூர் நிர்வாணமாக நடனமாடிய வீடியோ யூடியூப்பில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்ப்படுத்தியது .

குடிபோதையில் அவர் நிர்வாணமாக ஆடியதாக தெரிகிறது . ஏற்கனவே ஊழல் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் திணறும் காங்கிரசுக்கு இந்த நிர்வான நடனம் புது தலைவலியை ஏற்ப்படுத்தியதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் .

Leave a Reply