அமைச்சர்கள்  பதவியிலிருந்து விலகாமல் எந்த மசோதாவையும் நிறைவேற விடமாட்டோம் ரயில்வே அமைச்சரும், சட்டத்துறை அமைச்சரும் தங்கள் பதவியிலிருந்து விலகாமல், நாடாளுமன்றத்தில் எந்த மசோதாவையும் நிறைவேற விடமாட்டோம் என பா.ஜ.க., கூறியுள்ளது.

அமைச்சர்கள் பதவி விலகாமல், நில கையகப் படுத்துதல் மசோதா, தேசிய உணவுபாதுகாப்பு மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற அனுமதிக்கமுடியாது என பாஜக திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது

ரயில்வே அமைச்சர் பன்சாலும், சட்டஅமைச்சர் அஸ்வனிகுமாரும் பதவி விலகாமலோ அல்லது நீக்கம் செய்யப் படாமலோ நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம். முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு மசோதாக்களையும் விவாதங்கள் நடத்தாமல் நிறைவேற்றவும் அனுமதிக்கமாட்டோம் என மக்களவையின் பா.ஜ.க.,வின் துணைத்தவைர் கோபிநாத் முண்டே தெரிவித்துள்ளார்.

Leave a Reply