கர்நாடகாவில் மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர் கர்நாடகாவில் மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர். அதனால் தான் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. இது பாராளுமன்றதேர்தலில் எந்தபாதிப்பையும் ஏற்படுத்தாது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைக்கும் என்று பா.ஜ.க தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது ; தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்தவேண்டும். தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தவேண்டும், வறட்சியை பார்வையிட வந்துள்ள மத்தியகுழு வறட்சிபாதித்த அனைத்து பகுதிகளையும் பார்வையிடவேண்டும். பயிர்காப்பீடு செய்யாத பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்யவேண்டும் என்றார்.

Leave a Reply