மக்கள் அளித்ததீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் அளித்ததீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் என முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது இயல்பே .

கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க., தலைமையிலான அரசு ஏராளமான வளர்ச்சிப்பணிகளை செயல்படுத்தியது. அதைக்காட்டிலும், பாஜக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் ஊழல், உள்கட்சிப்பூசல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி செய்யப்பட்ட பொய்ப்பிரசாரத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர்.

பா.ஜ.க., ஆட்சியில் செயல் படுத்திய வளர்ச்சிப்பணிகள் தொடர்பான தகவலை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் இடறியுள்ளோம். இதனால், பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ்கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ளது. இது அந்த கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல. மாறாக, பா.ஜ.க.,வில் நிலவிய உள்கட்சிப்பூசல் போன்ற காரணங்களுக்காக எங்கள் கட்சிக்கு எதிராக அளித்தவாக்குகள் காங்கிரஸýக்கு சாதகமாகியுள்ளது. எனினும், மக்கள்தீர்ப்பை ஏற்கிறோம்.

சட்டப்பேரவையில் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்து மக்கள்பணி செய்வோம். மக்கள் பிரச்னைகளுக்காக ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியாக செயல்படுவோம். கடந்த 5 ஆண்டு காலம் கர்நாடகத்தை ஆளும்வாய்ப்பை மக்கள் பாஜகவுக்கு அளித்திருந்தனர். அதற்காக மக்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறோம்.

ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் ஜனநாயகத்தில் முக்கியதூண்களாகும். அந்தவகையில், கர்நாடக சட்டப் பேரவையில் முக்கிய இடத்தை மக்கள் பா.ஜ.க.,வுக்கு அளித்துள்ளனர் என்றார் ஜெகதீஷ் ஷெட்டர்.

Leave a Reply