காங்கிரஸ் . கட்சி முழுவெற்றி பெற்றுவிட்டதாக முடிவுக்கு வந்துவிட வேண்டாம் கர்நாடகா சட்ட சபை தேர்தலில் பெற்றவெற்றியை வைத்துக் கொண்டு காங்கிரஸ் . கட்சி முழுவெற்றி பெற்றுவிட்டதாக முடிவுக்கு வரக்கூடாது என்று தேசிய வாத காங்கிரஸ் . தலைவர் சரத்பவார் காங்கிரஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இந்தவெற்றி பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பேசிவருகின்றனர்.

இந்நிலையில் ஐ.மு., கூட்டணி அரசில் முக்கிய அங்கம்வகிக்கும் தேசியவாத காங். தலைவர் , சரத்பவார், தெரிவித்துள்ளதாவது கர்நாடகா தேர்தல்வெற்றியை வைத்து காங்கிரஸ் . எந்தமுடிவுக்கும் வரக்கூடாது. இந்தாண்டு ராஜஸ்தான், ம.பி.,, சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநில சட்ட சபை தேர்தல்கள் நடக்க உள்ளன. இவற்றில் காங். கடும்சவாலினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் , இதில் கிடைக்கும்வெற்றி , தோல்வியை பொறுத்தே, வரப்போகும் 2014 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் உள்ளது. இவற்றினை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே கர்நாடகா வெற்றியைமட்டுமே வைத்து எதையும் கணிக்ககூடாது . என்று சரத்பவார் பேசினார்.

Leave a Reply