எடியூரப்பாவின்   புதியகட்சியே   தோல்விக்கு காரணம்  எடியூரப்பாவின் புதியகட்சி வாக்குகளை பிரித்தால் தான் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று பா.ஜ.க., கூறியுள்ளது. இதுகுறித்து பாஜக. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

பா.ஜ.க.,விலிருந்து பிரிந்துசென்ற எடியூரப்பா கணிசமான வாக்குகளைப் பிரித்துவிட்டார். இது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எடியூரப்பாவை கட்சியில் நீடிக்கச்செய்ய முடிந்தவரை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் , அவரது அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கமுடியாத சூழல் இருந்தது. ஊழல் மிகவும் மோசமானது. அதை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது. எனவே, எடியூரப்பா விவகாரத்தில் கட்சி சரியான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. என்றார் பிரசாத்

பாஜக பொதுச்செயலாளர் ராஜூவ் பிரதாப்ரூடி கூறுகையில்,கர்நாடக பேரவைத்தேர்தலில் தோல்வியடைந்தது அதிர்ச்சியையும் கவலையையும் தருவதாக உள்ளது. இந்த தோல்விக்கான காரணம்குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்றார்.

Leave a Reply