கர்நாடகத் தேர்தல் தோல்வி நாடாளுமன்ற தேர்தலை எந்த விதத்திலும் பாதிக்காது கர்நாடகத்தேர்தல் தோல்வியை ஒப்பு கொள்கிறோம், ஆனால், இந்ததோல்வி நாடாளுமன்ற தேர்தலை எந்தவிதத்திலும் பாதிக்காது என பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத்சிங், தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துதெரிவித்துள்ள பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், “கர்நாடக தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், இந்தத்தோல்வி நாடாளுமன்றத் தேர்தலை எந்தவிதத்திலும் பாதிக்காது. கர்நாடகாவில் எடியூரப்பா பா.ஜ.க.,விலிருந்து விலகி தனித்து போட்டியிட்டதும் தோல்விக்கு ஒருகாரணம். ஆனால், எடியூரப்பாவை பா.ஜ.க., விலக்கி வைக்கவில்லை அவராகவே பா.ஜ.க.,வில் இருந்து விலகி விட்டார் என்பதுதான் உண்மை.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply