ஒருவழியாக அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்  பவன்குமார் பன்சால் லஞ்சப்புகாரில் சிக்கியுள்ள ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சால் மந்திரிசபையில் இருந்து நீக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துபேசினார். அப்போது, பன்சாலை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் ” என்று பிரதமரிடம் சோனியா வலியுறுத்தியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பு நடந்த சிலநிமிடங்களில், பவன்குமார் பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமாகடிதத்தை பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ளார். புதிய ரெயில்வே அமைச்சராக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply