மத்திய அரசைகண்டித்து  நாடுதழுவிய சிறை நிரப்பும்போராட்டம்  மத்திய அரசைகண்டித்து வருகிற 27-ஆம்தேதி முதல் ஜூன் 2-ஆம்; தேதிவரை ஒருவார காலம் நாடுதழுவிய சிறை நிரப்பும்போராட்டம் நடைபெறும் என பாஜக. அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , மத்தியில் ஆட்சிநடத்தும் ஐ.மு கூட்டணி, பொருளாதாரம், ராஜதந்திரம், உள்நாட்டுபாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுபாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பண வீக்கம், நாட்டின்வளர்ச்சி என்று அனைத்து துறைகளிலும் படு தோல்வி அடைந்துவிட்டது.

மேலும், அடுக்கடுக்கான முறை கேடுகள், ஊழல், ஒட்டு மொத்த இயலாமை, அளவுக்கு மீறியலஞ்சம் போன்றவற்றால் மத்தியஅரசு தடுமாறிவருகிறது , மத்திய அரசைகண்டித்தும், உடனடியாக மத்திய அரசு பதவி விலக வலியுறுத்தியும் வரும 27ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம்; தேதிவரை ஒரு வாரகாலம் நாடுமுழுவதும் சிறைநிரப்பும் போராட்டத்தை பா.ஜ.க நடத்த உள்ளது , இந்த போராட்டத்தின் மூலம் பாஜக தொண்டர்கள் மக்களை சந்தித்து, மத்தியஅரசின் தோல்வியை எடுத்துச்சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் எனம் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Leave a Reply