நரேந்திரமோடி, நாட்டின் மிகச் சிறந்த நிர்வாகி குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, நாட்டின் மிகச் சிறந்த நிர்வாகி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று இன்போசிஸ் நாராயண மூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவன இணைஇயக்குநர் நாராயண மூர்த்தி, குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். வதோதராவில் நிருபர்களிடம் பேசியஅவர், என்னைப் பொறுத்தவரையில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, நாட்டிலுள்ள மிகச் சிறந்த நிர்வாகிகளில் ஒருவர். அதில் எந்தசந்தேகமும் இல்லை.

நான் ஆமதாபாத் சென்றுவிட்டு தற்போது வதோதரா வந்துள்ளேன். நான் பார்த்த வரையில் மாநிலத்தின் மின் சார நிலைமை மிகச் சிறப்பாக இருக்கிறது. நல்ல தரமான சாலைவசதி, சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக உள்ளன. மாநிலத்தின் வளர்ச்சிதொடர்பாக என்னிடம் இருக்கும் அறிக்கைகள் மாநிலம் மிகவும் சிறப்பாக இருப்பதை உணர்த்துகின்றன என தெரிவித்தார்.

Leave a Reply