தீவிரவாதிகளுடன் சீமான் ? தமிழ் ஈழத்திற்கு வேட்டுவைக்கும் சூப்பர் கிட் முயற்சி ? கடலூரில் நாம்தமிழர் கட்சி ஏற்பாடுசெய்த முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மே 17 நிகழ்வின் நினைவு தின பொதுக் கூட்டம் பேரணி நடத்த நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடுசெய்திருந்தனர். ஆனால், இந்தப்பேரணிக்கும் பொதுக் கூட்டத்துக்கும்

தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தை உள்ளரங்கில்வைத்து நடத்த நாம் தமிழர் கட்சியினர் முடிவுசெய்திருக்கின்றனர் .

இதில் வேடிக்கை என்ன வென்றால் சீமான் விருந்தினராக அழைத்தது காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் யாசின்மாலிக் . ஜம்முகஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்குடன் தீவிரவாதிகள் நெருங்கியதொடர்பில் உள்ளனர் . காஷ்மீரில் நடைபெறு ம் போராட்டமு ம், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானது தான் என்று வேறு வாந்தி எடுத்துள்ளார் . இந்த பிரிவினை வாதியை அழைத்தான் மூலம் சீமான் மிகபெரிய தமிழின் துரோகம் செய்துள்ளார் . விடுதலைபுலிகளையும் தீவிரவாதிகளையும் ஒன்றாக சமூகம் இணைத்துபார்க்க சீமான் உதவுவதுபோல் தெரிகிறது .

இலங்கையில் உள்ள முஸ்லீம் கட்சியினர் ஈழதமிழர்களுக்கு ஆதரவுஅளித்ததில்லை . மாறாக இன்னும் அவர்கள் சிங்கள இனவெறிஅரசோடு அரசியல் கூட்டணியிலே அங்கம்வைக்கின்றனர் . அங்கொன்றும் இங்கொன்றுமாக பச்சோந்தி வேஷம்போடும் இந்த பிரிவினைவாதிகள் தமிழர்களை வைத்து ஏதோ சூட்சிசெய்வது போல் தெரிகிறது . கஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கநினைக்கும் தீவிரவாத குழுக்களுக்கு ஈழதமிழர்கள் மீது என்ன அக்கறை வந்துவிட்டது ?

பாராளுமன்ற தாக்குதல்வழக்கில் காஷ்மீரை சேர்ந்த அப்சல்குரு, திகார்சிறையில் ரகசியமாக தூகிளிடபட்டபோது .அதற்க்கு எதிர்ப்புதெரிவித்து பாகிஸ்தானில் உண்ணாவிரதம் இருந்தான் யாசின்மாலிக் .அவனுடன் 2008 மும்பை தாக்குதலில், 166 பேரை கொல்ல மூல காரணமாக இருந்த லஷ்கர் இதொய்பா தலைவன் ஹபீஸ் சயீத் சந்தித்து பேசியிருக்கிறான்.இப்போது இந்த தீவிரவாதகுழு சீமானுடன் சேர்ந்து தமிழினத்தை பிரிக்கும் வஞ்சகமுயற்சியில் இறங்கியுள்ளது .

ஒரு இனத்திற்கான ஓன்றுபட்ட உணர்ச்சிகான போராட்டதிற்க்கு சீமான் ஏன் தீவிரவாத சாயம்பூச முயற்சிக்க வேண்டும் ?

இந்தியாவை பிரிக்கநினைக்கும் தீவிரவாத குழுக்களுக்கு நிகராக தமீழவிடுதலை போராட்டத்தையும் இணைத்து சீமான் கொச்சைபடுத்தி இருக்கிறார் . தமிழர்களுக்கு தலைவன் என்கின்ற எண்ணத்தை சீமான் மறந்துவிடுவது நல்லது . விடுதலை புலிகளையும் ,தீவிரவாத கோளைகளையும் ஒன்றிணைக்கவேண்டாம் . இது விடுதலை புலிகளை கொச்சைபடுத்துவதற்கு சமம் . விடுதலை புலிகள் உரிமைக்காக எதிர்த்துபோரிட்டவர்கள் , தீவிரவாதிகள் அப்படி அல்ல ஒளிந்திருந்து குண்டுவைக்கும் கோழைகள்.

சீமான் அடக்கிவாசிப்பது நல்லது , ஓன்றுபட்ட தமிழினம் சீமானுக்கு எதிராக கணநேரத்தில் திரும்பலாம் . எச்சரிக்கைதேவை சீமான் அவர்களே , மக்கள் முட்டாள்கள் அல்ல.

நன்றி: ஆர்த்தி

Leave a Reply