ஏப்ரல் 14 அன்று தி.க.வின் ஒரு பிரிவினர் மனுசாஸ்திரம் எரிப்பு போராட்டம் நடத்தினர். மனுசாஸ்திரம் ஜாதி பிரிவினையைத் தூக்கிப்பிடிப்பதாக காரணம் கூறினார்கள்.

மனுசாஸ்திரம் யாருக்காவது தெரியுமா?

மனுசாஸ்திரம் என்பது என்ன என்றுகூட இன்றைய தலைமுறைக்குத் தெரியாது! அது நடைமுறையில் எந்த விதத்திலும் இல்லை. மக்களிடமும் மனுசாஸ்திரம் நடைமுறையில் இல்லை என்பதைவிட மனுசாஸ்திரத்தைப் பார்த்து யாரும் இங்கு ஜாதியை பின்பற்றுவதே, ஜாதிய பகுப்பாட்டை அடையாளப்படுத்துவதோ இல்லை. எல்லாம் அரசியல்! எல்லாம் ஒட்டு வங்கி நாடகம்!

மனுசஸ்திரத்திற்கு மக்கள் அங்கீகாரமோ,சட்ட அங்கீகாரமோ கிடையாது என்பது அப்பட்டமான உண்மை.

மூட நம்பிக்கை, மக்களை பாகுபாடு படுத்தும் நூலை எரித்து எதிர்ப்பைக் காட்ட வேண்டுமானால் நடைமுறையில் உள்ளதைத்தான் இவர்கள் கையில் எடுக்க வேண்டும்.

அது ஷரியத் சட்டம்தான்..!

பெண் அடிமைத்தனம், பால்ய விவாகம், பலதார மணம் என எண்ணற்றப் பிரச்சனைகளில் ஷரியத் சட்டம் துணைநிற்கிறது.

திருமணப் பதிவை கட்டாயப்படுத்தினால் அதனை ஏற்க மாட்டோம், ஷரியத் சட்டப்படிதான் நடத்துவோம் என்று முஸ்லீம்கள் கூச்சலிடுகிறார்கள்.

ஷரியத் சட்டம் முஸ்லீம் மத சட்டமாக இந்திய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.நடைமுறையில் மூட நம்பிக்கையை வளர்க்கும் ஷரியத் சட்டத்தைப் பற்றி வாய் திறக்காத இந்த தி.க. வீரர்களை என்னவென்று சொல்வது?

இந்த ஷரியத் சட்டப்படி ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலே திருமணம் செய்யலாம் என்று அறிவியலுக்குப் புறம்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதனை ஏன் திராவிட அமைப்புகள் எதிர்க்கவில்லை.

சட்டசபையில் இதைப்பற்றி விவாதம் வந்தபோது எந்தக் கட்சியும் வாயைத் திறக்கவில்லை. சிறு முணுமுணுப்புக்கூட செய்யவில்லை! ஏன்?

பெண்கள் பர்தாவெனும் முக்காடுக்குள் முடங்கிப் போக வேண்டும், முல்லா, மௌல்விகள் மட்டுமே நிக்காவை நடத்தி வைப்பார்கள், நிக்காவை (முஸ்லீம் திருமணத்தை) பதிவு செய்வதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூக்குரல் விடுத்தார்களா? இல்லையே !

மூட நம்பிக்கை, மதப் பிடிவாதம், மக்களைத் தங்கள் பிடியில் அமுக்கிப்பிடிக்கவே ஷரியத் சட்டம் என்பது வெட்டவெளிச்சம்!

மதத்திற்கு ஒரு சட்டம் என்பது மதவாதத்தின் அடிப்படைதானே!

அதனைத்தானே அண்ணல் அம்பேத்கர் நீக்கி பொது சிவில் சட்டம் .. அனைவருக்கும் பொதுவான சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்றமும் அதனைத் தானே சொல்லி வருகிறது.

அப்படியிருக்கையில் ஏன் எதிர்க்கவில்லை ? ஏன் எரிக்கவில்லை?

இவர்கள் தொடை நடுங்கிக்கூட்டம்! ஒரு சமயம் ஈ.வே. ரா. முஸ்லீம் பற்றி பேசியபோது, முஸ்லீம்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டு, நடுங்கிப்போன ஈ.வே.ரா.! அதன் பிறகு வாய் திறப்பதில்லை!

இவர்களது நோக்கம் இந்துக்களை சீண்டிப்பார்ப்பதுதான். மட்டம் தட்டுவது தான்! அதற்கு இவர்களிடம் கிடைத்தது நமுத்து போன

வெடியான மனுசாஸ்திரம்.

Leave a Reply