ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட தமிழ் வழிக்கல்வி புறக்கணிக்கப்படவில்லை தமிழகத்தில் இருக்கும் கலை, அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகளை ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும் என்ற முடிவை தமிழக அரசு கைவிடவேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட தமிழ் வழிக்கல்வி புறக்கணிக்கப்படவில்லை என பாஜக மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை மேலும் கூறியிருப்பதாவது :

மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கப்படும் என்று பெருமையோடு அறிவித்தகையோடு, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தமிழகஅரசு ஈடுபட்டுள்ளது. இது அரசின் இரட்டைநிலையை வெளிப்படுத்துகிறது.

எங்கும் தமிழ், எதிலும்தமிழ் என சொல்லிய திராவிடக்கட்சிகளின் 45 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்தெரியாத ஒரு தலைமுறையை உருவாகியுள்ளது. தமிழைவளர்ப்போம் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு மறுபுறம் ஆங்கில வழிக்கல்விக்கு வித்திடுவது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட தமிழ் வழிக்கல்வி புறக்கணிக்கப்படவில்லை. சீனா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கூட தாய் மொழிக்கல்விக்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது . இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டுமுதல் கல்லூரித் தேர்வுகளை ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டும் என்று மாநில உயர்கல்வி மன்றம் அரசுக்கு பரிந்துரைசெய்துள்ளது. இதனை தமிழக அரசு நிராகரித்து தமிழில் தேர்வு எழுத ஆவன செய்யவேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply