யாசின் மாலிக்கை வரவேற்ற சீமானின் கரங்கள்   சிங்களனை வரவேற்குமா தடை செய்யப்பட்ட இயக்கத்தைத்தான் எதிர்க்க வேண்டும் என்றால்! யாசின் மாலிக்கை வரவேற்ற சீமானின் கரங்கள் சிங்களனை வரவேற்று அவன் கழுத்தில்தான் மாலையிடுமா?. யாசின் மாலிக்கை கட்டி அனைத்த அதே சீமானின் கரங்கள் இலங்கை ராணுவத்தை கட்டி அணைக்குமா?. இலங்கை

சிங்களனுக்கும் , யாசின் மாலிக்குக்கும் இடையே என்ன வேறுபாட்டை கண்டாய் சீமானே?. தலைக்கு ஒரு சீயக்காயும் தாடிக்கு ஒரு சீயக்காயும் பூசுகிறாயே சீமானே.

இந்தியாவை துண்டாட நினைக்கும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் யாசின் மாலிக்கை தமிழகம் அழைத்து வந்து தேசவிரோத கருத்துக்களை பேச வைத்தது மட்டும் அல்லாமல். இந்தியநாட்டின் குடிமகனான யாசின் மாலிக் இந்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் . ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கம் அல்ல என்று பிரிவினை வாத இயக்கங்களின் பிரச்சார அணி தலைவரை போன்று பேசிவருகிறார் சீமான் .

யாசின் மாலிக் இந்தியாவில் மட்டும் அல்ல பாகிஸ்தானிலும் மூலை முடுக்கு என்று எங்கும் செல்லும் உரிமை பெற்றவர். இந்தியாவை பற்றி அவதூறு பரப்பவே பாகிஸ்தானில் சிறப்பு கூட்டங்களை நடத்துபவர் இதை எல்லாம் அறிவாரா சீமான்? . . தடை செய்யப்பட்ட இயக்கத்தைத்தான் தடுக்க வேண்டும் என்று சொல்லும் சீமானே!!! சிங்களன் என்ன தடை செய்யப்பட்ட இனமா? . இலங்கை ராணுவம் என்ன தடை செய்யப்பட்ட இயக்கமா?. தமிழகத்தை சுற்றிபார்க்க வரும் சிங்களனை அடிச்சி விரட்டுற?. இராணுவ பயிற்சி பெற வரும் இலங்கை இராணுவத்தை எதிர்த்து போராட்டம் நடத்துற?. தாடிக்கு ஒரு சீயக்காய் தலைக்கு ஒரு சீயக்காயா சீமானே?.

இலங்கை இராணுவம் அப்பாவி தமிழனை கொன்றது. இலங்கை சிங்களன் அதை வேடிக்கை பார்த்தான் ஆதரித்தான். எனவே நீங்ககள் அதை எதிர்க்கிறீர். இன கண்ணோட்டத்தில் நீங்கள் அதை எதிர்க்கிறீர் . இந்தியன் என்ற கண்ணோட்டத்தில் நாங்களும் அதை எதிர்க்கிறோம் .

பாகிஸ்தானின் ஆதரவு  பயங்கரவாத இயக்கங்கள் வருடத்துக்கு இத்தனை உயிர் என்று இலக்கு வைத்து அப்பாவி இந்தியர்களை கொன்று குவிக்கிறது . யாசின் மாலிக்கோ இதை எல்லாம் ஆதரிப்பதை போன்று அமைதியாக இருந்து விடுவது மட்டும் அல்லாமல் . அடிக்கடி பாகிஸ்தானுக்கு பயணம் செய்கிறேன் என்ற போர்வையில் பயங்கரவாதிகளை சந்தித்து விட்டுத்தான் வருகிறார் . அப்பாவிகள் பலநூறு பேர் தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு பலியாகும் போது அமைதிகாக்கும் இந்த மாலிக்குகள் . குண்டு வைத்த தீவிரவாதிகளை தூக்கிலிடும்போது மட்டும் துள்ளி எழுகிறார்கள் . மனித உரிமை பேசுவது மட்டும் அல்லாமல் குண்டு வைத்த தீவிரவாத இயக்க தலைவர்களுடனேயே உண்ணாவிரதமும் இருக்கிறார்கள்

சொந்த நாட்டு மக்களையே கொல்லும் சிங்களனுக்கும் , சொந்த நாட்டு மக்களையே கொல்லும் அந்நிய தீவிரவாத இயக்கங்களுடன் உறவு கொள்ளும்

யாசின் மாலிக்குக்கும் என்ன வித்தியாசத்தை கண்டீர் சீமான? கேட்பவருக்கு எல்லாம் பிரித்து கொடுக்க எங்கள் பாரதம் ஒன்றும் நாம் தமிழர் கட்சி பதவிகள் அல்ல சீமானே. இந்துவும் முஸ்லீமும் ஒன்றாக வாழவே முடியாது தனி நாட்டை பிரித்துகொடு என்று பிரிந்து சென்ற பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய தேசத்திலிருந்து உடைந்து வந்ததுதான் பங்களாதேஷ் என்ற இஸ்லாமிய தேசம் சீமானே . பாகிஸ்தானுக்கு நிகரான இஸ்லாமியர்களை உடைய நமது பாரதம் பாகிஸ்தானை விட பலமடங்கு உயர்ந்துதான் சென்றுள்ளதே தவிர பிரிந்து செல்லவில்லை சீமானே.

தமிழ்தாமரை V.M.,வெங்கடேஷ்

Leave a Reply