இந்தோனோசியாவும்  பிரம்ம வழிபாடும் இந்தோனோசியாவில் பிரம்ம வழி பாடு பிரசித்தி பெற்றது..200க்கும் மேற்பட்ட பிரம்மா கோவில்கள் அங்கு உண்டு இந்தோனேசியாவின் மிகப்பழமை வாழ்ந்த ஒரு இடம்தான் பாலி..இந்துக்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசம்…இங்கு மட்டும் 20000 இந்துக்கோயில்கள் உண்டு..

இந்தோனேசியாவின் ஜாவா என்னும் இடத்தில் பிரம்பதேவனுக்கு என ஒரு பிரமாண்டமான கோவில் உண்டு..இதன் பெயர் பிரம்பனன் கோவில். இக்கோவில் 9ம் நூற்றாண்டில் கட்டப்ப்பட்டது..இந்தக்கோவிலில் பிரம்பா பிரமாண்டமாக காட்சி அளிப்பது தான் இக்கோவிலின் வெஷேசம். இந்தக்கோவிலின் சுவர்களில் இராயாண சித்திரங்களை அழகிய ஓவியங்களாக காண்லாம்

இது போக இந்தோனோசியாவில் பிரம்மனின் வாகனமான ஹம்சத்துக்கே (அன்னம்)ஒரு தனிக்கோவில் உண்டு. இதுகும் பாலி தீவில்தான் உண்டு..

அடுத்த சிறப்பு மிக்க கோயிலான "பெஷாகிக்" இது எப்போதும் கக்கிக்கொண்டு இருக்கும் "ஆகுங்" எரிமலையின் அடிவாரத்தில் உள்ளது.இங்கு சிவன், விஸ்ணு, பிரம்மா என மூன்றும் கடவுள்களும் உள்ளனர். இதில் எது பிரம்ம தெவனின் கோவில் என்பதை அடையாளம் காண சிகப்பு வண்ணக்கொடி பறக்கும்…

இதே பாலியில் அண்டகேசா என்னும் இன்னொரு கோவிலும் உள்ளது. அதை ஸ்நானா ஆப் தேவ பிரம்மா என் அழைக்கின்றார்கள். பாலியில் ஒவ்வொரு ஊரிலுமே பிரம்மாவுக்குக்கோயிகள் இருக்கின்றன.

தாய்லாந்தில் சிறப்பாக இயங்கி வரும் பிரம்மா கோவில்களை ஏராளமாய் தரிசிக்கலாம். தாய்லாந்தில் பிரம்மாவை : ப்ரோப்ரோம்" என ழைக்கின்றார்கள். எர்ராலன் கோவிலும் இந்த பெயரிலேயே அழைக்கின்றனர்

தாய்லாந்தில் மன்னரின் உல்லாசப்படகு அன்ன வடிவத்தில் இருக்கும். அதில் அவர் பயணிக்கும்போதது அன்ன வாகனத்தில் பிரம்மா என்ரே சொல்வார்களாம்..

நம்ம ஊரில் சந்தி கூடும் இடத்தில் வீடு கட்டினால் அங்கு பிள்ளையார் வைப்பர். தாய்லாந்திலோ பிரம்மா சிலையை வைப்பர். ஆனால் தாய்லாந்தில் வீடு கட்டினால் பிரம்மா சிலையைத்தான் வைப்பார்களாம்.தாய்லாந்து அரசாங்கம் பிரம்மாவை சிறப்பிக்கும் வக்கையில் தபால் தலையே வெளியிட்டு உள்ளது..

தெற்கு ஆசியாவில் உள்ள ஹிந்துக்களுக்கும் புத்த மதத்திற்கும் பிரம்மா முக்கிய பங்கு உண்டு..

இது போக ராம கீர்த்தியும் தாய்லாந்தில் பிரசித்தமானது
தாய்லாந்து அரசர்கள் தங்களை ராமா என்று அழைத்துகொள்கின்றனர். சில கலங்களின் இருந்த அரசின் பெயர் "பூமி பால் அதுல்ய டேஜ் 9வது ராமா" என்பதாகும்.

கி.பி 17ம் நூற்றாண்டில் "தாய்" மொழியில் இயற்றப்பட்ட "ராம கீர்த்தி"எனப்படும் ராமாயணம் பள்ளிகளில் மற்றும் புத்தர் கோயில்களில் ராமாயண சித்திரம் எனும் பெயரில் மிகப்பெரிய சுவர்ச்சித்திர வடிவில் உள்ளது.

தாய் குத்துசண்டை விளையாட்டு அனுமன்,வாலி,சுக்ரீவன், முதலிய வானர வீரர்களின் சண்டை முறைகளை அடிப்படையாக கொண்டது எனக்கூறுகின்றனர். தாய்லாந்தின் பெயர் அவர்களின் அரசியல் கட்டத்தில் "ஷ்யாம் -தேஷ் "என்று அழைக்கின்றனர்…இதன் பொருள் விஷ்ணுவின் நாடு என்பதே ஆகும். தற்போது கூட சில ஊர்களின் பெயர்கள் அயோத்தியா ,லவபுரி,காஞ்சன புரி என்று உள்ளது

Leave a Reply