இலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதாதேவிக்கு கோயில் மத்திய பிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைபிடித்தால், சீதைக்கு இலங்கையில் கோயில் கட்டித்தருகிறோம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் அறிவித்துள்ளார்.

கடந்த ஒன்பது வருடமாக பாஜக.,வின் ஆட்சிதான் மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது .இந்நிலையில், தேர்தல் பிரசார வியூகங்கள்குறித்து பேசுவதற்காக முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் மாநில பா.ஜ.க தலைவர்களின் மூன்றுநாள் மாநாடு நேற்றுமுன்தினம் குவாலியரில் துவங்கியது . இதில் கலந்துகொண்ட சிவ்ராஜ் பேசியதாவது, பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் இலங்கையில் சீதாதேவிக்கு கோவில் கட்டப்படும்.

இலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதாதேவி தனது கற்பைநிரூபிக்க அக்னி பரீட்சையில் இறங்கினார். இந்த இடத்தில் அவருக்கு கோயில்கட்ட இலங்கை அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார்.

Leave a Reply