நாட்டில் மக்களிடமும், கட்சிக்குள் தொண்டர்களிடமும் நரேந்திரமோடிக்கு நல்ல ஆதரவு உள்ளது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டும் உள்ளனர் என்று பாஜக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; மோடி கர்வம்கொண்டவர் என்று அத்வானி கூறியிருப்பார் என நான் எண்ணவில்லை . அத்வானியின் வார்த்தைகள் தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் முன்னேற்றபணிகளுக்காக அம்மாநில முதல்வரை அத்வானி பாராட்டியதை, ஒருவருக்கு எதிராகபேசியதாக ஊடகங்கள் திரித்துக்கூறியுள்ளன. அதேகூட்டத்தில் குஜராத்தின் வளர்ச்சிகுறித்தும் அவர் பாராட்டி பேசியுள்ளார் என்றார் .

Leave a Reply